Saturday, 10 May 2014




காலங்களுக்கேற்ற புஷ்பங்கள் : காலை : தாமரை, பொரசு, துளசி, நவமல்லிகை, நந்தியாவட்டை, மந்தாரை, முல்லை, சண்பகம், புன்னாகம், தாழை, நண்பகல் : வெண்தாமரை, அரளி, பொரசு, துளசி, நெய்தல், வில்வம், சங்கபுஷ்பம், மருதாணி, கோவிதாரம், ஒரிதழ். மாலை : செந்தாமரை, அல்லி, மல்லிகை, ஜாதி, முல்லை, மருக்கொழுந்து, வெட்டிவேர், கஜகர்ணிகை, துளசி, வில்வம். 8.2 அஷ்ட புஷ்பங்கள் : அறுகு, சண்பகம், பன்னாகம், நந்தியாவட்டை, பாதிரி, ப்ரஹதி, அரளி, தும்பை இலைகள். 8.3 எடுக்கப்பட்ட புஷ்பங்களின் உபயோக நாட்கள் : தாமரை - 5 நாட்கள், அரளி - 3 நாட்கள், வில்வம் - 6 மாதம், துளசி - மூன்று மாதம், தாழம்பூ - 5 நாட்கள், நெய்தல் - 3 நாட்கள், சண்பகம் - 1 நாள், விஷ்ணுக்ரந்தி - 3 நாள், விளாமிச்சை - எப்போதும். 8.4 உபயோகப் படுத்தக் கூடாத புஷ்பங்கள் : கையில் கொண்டு வந்தது, தானாக விழுந்தது, கொட்டை (ஆமணக்கு) அல்லது எருக்க இலைகளில் கட்டிக் கொண்டு வந்தது, வாசனை அற்றது, மயிர் கலந்து கிடந்தது, புழு இருந்தது, மிகக் கடுமையான வாசனை உள்ளது, வாடியது, நுகரப்பட்டது, தானாக மலராமல் செயற்கையாக மலரச் செய்யப்பட்டது, அசுத்தமான முறையில் எடுத்து வரப்பட்டது, ஈர வஸ்திரத்துடன் எடுத்து வரப்பட்டது. யாசித்துப் பெறப்பட்டது, பூமியில் விழுந்து கிடந்தது ஆகியன. பொதுவாக, மலராத மொட்டுக்கள் (சம்பக மொட்டு நீங்கலாக) பூஜைக்கு உதவா. 8.5 துளசி, முகிழ், சண்பகம், தாமரை, வில்வம், கல்ஹாரம், மருக்கொழுந்து, மருதாணி, தருப்பை, அருகு, அஸிவல்லி, நாயுருவி, விஷ்ணுக்ரந்தி, நெல்லி - ஆகிய செடி



1. ஈசன், லிங்கத்தில் பிரசன்னமான நாள். 2. அடி& முடி தேடிய விஷ்ணு மற்றும் பிரம்மா ஆகியோருக்கு சிவனார் காட்சி தந்த நாள். 3. பார்வதி வழிபட்டு அர்த்தநாரியான நாள். 4. பாற்கடல் கடையும்போது வெளிப் பட்ட விஷத்தை சிவனார் உண்ண... அதை விழுங்கா வண்ணம் தடுத்தார் பார்வதிதேவி. இதனால், நீலகண்டன் நஞ்சுண்டன் ஆகிய பெயர்களை, சிவனார் பெற்ற நாள். (இப்படி விஷம் உண்ட மயக்கம் தீர சிவபெருமான், பார்வதிதேவியின் மடியில் பள்ளி கொண்டார். இப்படிப்பட்ட காட்சியை கருவறையிலேயே காணலாம். எங்கு தெரியுமா? ஆந்திராவில் சுருட்டப்பள்ளி என்ற ஊரில்). 5. அர்ஜுனன் தவம் இருந்து பாசுபதம் பெற்ற நாள். 6. பகீரதன் ஒற்றைக் காலில் கடும் தவம் இருந்து கங்கையை பூமிக்கு வரவழைத்த நாள் (இந்த தவக் கோலத்தை புடைப்புச் சிற்பமாக மாமல்லபுரத்தில் காணலாம்) 7. மார்க்கண்டேயனுக்காக, எமதர்மனை சிவனார் சம்ஹரித்த நாள் (திருக்கடையூர்). 8. கண்ணப்பன் தன் கண்களை சிவனுக்குக் கொடுத்த நாள் (காளஹஸ்தி) 9. மகா பிரளயம் உண்டானபோது மீண் டும் உலகைப் படைக்க பார்வதிதேவி சிவ பெருமானை நோக்கி தவம் இருந்த திருநாள். _ இப்படி, புண்ணியம் மிகுந்த நிகழ்ச்சிகள் பல நடந்தது இந்த சிவராத்திரியில்தான் எனக் கூறப்படுகிறது.

"Thiruvanaikoil மகா சிவராத்திரி நாளில் நடந்தவை! 1. ஈசன், லிங்கத்தில் பிரசன்னமான நாள். 2. அடி& முடி தேடிய விஷ்ணு மற்றும் பிரம்மா ஆகியோருக்கு சிவனார் காட்சி தந்த நாள். 3. பார்வதி வழிபட்டு அர்த்தநாரியான நாள். 4. பாற்கடல் கடையும்போது வெளிப் பட்ட விஷத்தை சிவனார் உண்ண... அதை விழுங்கா வண்ணம் தடுத்தார் பார்வதிதேவி. இதனால், நீலகண்டன் நஞ்சுண்டன் ஆகிய பெயர்களை, சிவனார் பெற்ற நாள். (இப்படி விஷம் உண்ட மயக்கம் தீர சிவபெருமான், பார்வதிதேவியின் மடியில் பள்ளி கொண்டார். இப்படிப்பட்ட காட்சியை கருவறையிலேயே காணலாம். எங்கு தெரியுமா? ஆந்திராவில் சுருட்டப்பள்ளி என்ற ஊரில்). 5. அர்ஜுனன் தவம் இருந்து பாசுபதம் பெற்ற நாள். 6. பகீரதன் ஒற்றைக் காலில் கடும் தவம் இருந்து கங்கையை பூமிக்கு வரவழைத்த நாள் (இந்த தவக் கோலத்தை புடைப்புச் சிற்பமாக மாமல்லபுரத்தில் காணலாம்) 7. மார்க்கண்டேயனுக்காக, எமதர்மனை சிவனார் சம்ஹரித்த நாள் (திருக்கடையூர்). 8. கண்ணப்பன் தன் கண்களை சிவனுக்குக் கொடுத்த நாள் (காளஹஸ்தி) 9. மகா பிரளயம் உண்டானபோது மீண் டும் உலகைப் படைக்க பார்வதிதேவி சிவ பெருமானை நோக்கி தவம் இருந்த திருநாள். _ இப்படி, புண்ணியம் மிகுந்த நிகழ்ச்சிகள் பல நடந்தது இந்த சிவராத்திரியில்தான் எனக் கூறப்படுகிறது. source : sakthi vikatan"

சிவராத்திரி வரலாறு! பிரம்மாவும் மஹாவிஷ்ணுவும், சிவபெருமானின் முடி&அடி தேடிய வரலாறு நமக்குத் தெரியும். இது நிகழ்ந்தது, மாசி மாதத் தேய்பிறை சதுர்த்தசி தினத்தன்று. அந்த நாளே சிவராத்திரி. இதை ஸ்காந்த மஹாபுராணம் கூறுகிறது. மாக க்ருஷ்ண சதுர்தஸ்யாம் அனலாசல மத்புதம் & ஸ்காந்த மஹா புராணம் இது தவிர மற்றோர் அற்புதமான கதையும் உண்டு. பிரளய காலம் முடிந்த அன்றைய இரவு நேரத்தில் அம்பிகை உமா தேவி, நான்கு ஜாமங்களிலும் சிவ பெருமானை ஆகம முறைப்படி பூஜை செய்தார். மறு நாள் பொழுது விடிந்தது. சிவபெருமானை வணங்கிய அம்பிகை, ‘‘ஸ்வாமி! தங்களை நான் பூஜித்த இந்த இரவை, எல்லோரும் சிவராத்திரி என உங்கள் பெய ரால் அழைக்க வேண்டும். அத்து டன் சிவராத்திரி அன்று சூரிய அஸ்தமனம் முதல், மறு நாள் காலை சூரிய உதயம் வரை தேவர்கள் உட்பட எல்லோரும் உங்களை பூஜை செய்ய வேண்டும். அப்படி பூஜை செய்பவர்களுக்கு சர்வ மங்கலங்களுடன் முடிவில் முக்தியையும் தாங்கள் அருள வேண்டும்!’’ என வேண்டினார். பரமசிவனும், ‘‘அப்படியே!’’ என்று அருள் புரிந்தார். அம்பிகை பூஜை செய்த அந்த நாளே (மாசி மாதத் தேய்பிறை சதுர்த்தசி) மகா சிவராத்திரி என அழைக்கப்படுகிறது. நியதிப்படி பகல் பொழுது சிவபெருமானுக்கும், இரவுப் பொழுது அம்பிகைக்கும் உரியது. அம்பிகை, தனக்குரிய இரவுப் பொழுதை சிவபெருமான் பெயரால் வழங்கச் செய்தார்.


சிவராத்திரி விரதம் முழுமையாக இருக்க இயலாதவர்கள் லிங்கோத்பவ காலத்தில் இரவு 11.30 முதல் 1.00 மணிக்குள் சிவன் கோவில் பின்புறம் வீற்றிருக்கும் லிங்கோத்பவரை வணங்கினால் சகல பாவங்களும் பஸ்பமாகும்... ஓம் நமசிவய ! ஓம் சிவாய நாம !