1. ஈசன், லிங்கத்தில் பிரசன்னமான நாள். 2. அடி& முடி தேடிய விஷ்ணு மற்றும் பிரம்மா ஆகியோருக்கு சிவனார் காட்சி தந்த நாள். 3. பார்வதி வழிபட்டு அர்த்தநாரியான நாள். 4. பாற்கடல் கடையும்போது வெளிப் பட்ட விஷத்தை சிவனார் உண்ண... அதை விழுங்கா வண்ணம் தடுத்தார் பார்வதிதேவி. இதனால், நீலகண்டன் நஞ்சுண்டன் ஆகிய பெயர்களை, சிவனார் பெற்ற நாள். (இப்படி விஷம் உண்ட மயக்கம் தீர சிவபெருமான், பார்வதிதேவியின் மடியில் பள்ளி கொண்டார். இப்படிப்பட்ட காட்சியை கருவறையிலேயே காணலாம். எங்கு தெரியுமா? ஆந்திராவில் சுருட்டப்பள்ளி என்ற ஊரில்). 5. அர்ஜுனன் தவம் இருந்து பாசுபதம் பெற்ற நாள். 6. பகீரதன் ஒற்றைக் காலில் கடும் தவம் இருந்து கங்கையை பூமிக்கு வரவழைத்த நாள் (இந்த தவக் கோலத்தை புடைப்புச் சிற்பமாக மாமல்லபுரத்தில் காணலாம்) 7. மார்க்கண்டேயனுக்காக, எமதர்மனை சிவனார் சம்ஹரித்த நாள் (திருக்கடையூர்). 8. கண்ணப்பன் தன் கண்களை சிவனுக்குக் கொடுத்த நாள் (காளஹஸ்தி) 9. மகா பிரளயம் உண்டானபோது மீண் டும் உலகைப் படைக்க பார்வதிதேவி சிவ பெருமானை நோக்கி தவம் இருந்த திருநாள். _ இப்படி, புண்ணியம் மிகுந்த நிகழ்ச்சிகள் பல நடந்தது இந்த சிவராத்திரியில்தான் எனக் கூறப்படுகிறது.
"Thiruvanaikoil
மகா சிவராத்திரி நாளில் நடந்தவை! 1. ஈசன், லிங்கத்தில் பிரசன்னமான நாள். 2. அடி& முடி தேடிய விஷ்ணு மற்றும் பிரம்மா ஆகியோருக்கு சிவனார் காட்சி தந்த நாள். 3. பார்வதி வழிபட்டு அர்த்தநாரியான நாள். 4. பாற்கடல் கடையும்போது வெளிப் பட்ட விஷத்தை சிவனார் உண்ண... அதை விழுங்கா வண்ணம் தடுத்தார் பார்வதிதேவி. இதனால், நீலகண்டன் நஞ்சுண்டன் ஆகிய பெயர்களை, சிவனார் பெற்ற நாள். (இப்படி விஷம் உண்ட மயக்கம் தீர சிவபெருமான், பார்வதிதேவியின் மடியில் பள்ளி கொண்டார். இப்படிப்பட்ட காட்சியை கருவறையிலேயே காணலாம். எங்கு தெரியுமா? ஆந்திராவில் சுருட்டப்பள்ளி என்ற ஊரில்). 5. அர்ஜுனன் தவம் இருந்து பாசுபதம் பெற்ற நாள். 6. பகீரதன் ஒற்றைக் காலில் கடும் தவம் இருந்து கங்கையை பூமிக்கு வரவழைத்த நாள் (இந்த தவக் கோலத்தை புடைப்புச் சிற்பமாக மாமல்லபுரத்தில் காணலாம்) 7. மார்க்கண்டேயனுக்காக, எமதர்மனை சிவனார் சம்ஹரித்த நாள் (திருக்கடையூர்). 8. கண்ணப்பன் தன் கண்களை சிவனுக்குக் கொடுத்த நாள் (காளஹஸ்தி) 9. மகா பிரளயம் உண்டானபோது மீண் டும் உலகைப் படைக்க பார்வதிதேவி சிவ பெருமானை நோக்கி தவம் இருந்த திருநாள். _ இப்படி, புண்ணியம் மிகுந்த நிகழ்ச்சிகள் பல நடந்தது இந்த சிவராத்திரியில்தான் எனக் கூறப்படுகிறது. source
: sakthi vikatan"
சிவராத்திரி விரதம் முழுமையாக இருக்க இயலாதவர்கள் லிங்கோத்பவ காலத்தில் இரவு 11.30 முதல் 1.00 மணிக்குள் சிவன் கோவில் பின்புறம் வீற்றிருக்கும் லிங்கோத்பவரை வணங்கினால் சகல பாவங்களும் பஸ்பமாகும்... ஓம் நமசிவய ! ஓம் சிவாய நாம !
No comments:
Post a Comment